அந்தியூர் அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட கட்டிடம் பயன்பாட்டிற்கு வந்தது
Advertisement
அந்தியூர்,டிச.9: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடியில் புதிய மருத்துவமனை கட்டிடம் தமிழக முதல்வரால் கடந்த வாரம் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டிடம் நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
புதிய மருத்துவமனை கட்டிடம் நேற்று முதல் செயல்பட துவங்கியதை முன்னிட்டு எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இதில் தலைமை அரசு மருத்துவர் பிரகாஷ் மற்றும் மருத்துவக் குழுவினர்கள், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் பாப்பாத்தி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் யாஸ்மின் தாஜ், கவிதா, வார்டு கழகச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement