ஈரோடு, ஆக. 8: ஈரோடு பழைய பேருந்து நிலையம் வணிக வளாகம் மற்றும் காமராஜர் சாலை வணிக வளாகம், நேதாஜி வணிக வளாக கடைகளில் 12 கடைகளின் உரிமையாளர்கள் ஈரோட்டில் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் ரூ.13 லட்சத்து 79 ஆயிரத்து 719 பாக்கி வைத்திருந்தனர். அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. வாடகை பாக்கி தொகையை செலுத்த முன்வராததால், 12 கடைகளையும் பூட்டி சீல் வைக்க மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று ஜவுளி வணிக வளாகத்தில் மாநகராட்சி வருவாய் பிரிவு அலுவலர்கள் 12 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.
+
Advertisement



