பவானி, ஆக. 8: மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பில் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள் நிகழ்ச்சி பவானியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட திமுக இலக்கிய அணி அமைப்பாளர் எஸ்.ஏ.அன்பழகன் தலைமை தாங்கினார். பவானி நகர பொருளாளர் ராஜசேகர், தொமுச பொதுக்குழு உறுப்பினர் அசோக் முன்னிலை வகித்தனர். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டதோடு, அவரது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்களை விளக்கி கூறப்பட்டது. நிர்வாகிகள் திருமூர்த்தி, சசிகுமார், ராமச்சந்திரன், ஜெயக்குமார், கௌதம் கர்ணா, ரஞ்சித், தீனதயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement



