பவானி, ஆக.8: கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி பவானியில் 200-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள், முதியோர்கள் மற்றும் திமுக முன்னோடிகளுக்கு வேட்டி, சேலை மற்றும் உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பவானி நகர்மன்றத் தலைவர் சிந்தூரி இளங்கோவன், வர்த்தக அணி மாவட்டத் தலைவர் தவமணி, ஒன்றியச் செயலாளர்கள் கே.ஏ.சந்திரசேகர், சுந்தரம், அறிவானந்தம் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர்மன்றத் தலைவர் எம்.ஆர்.துரை, மாவட்ட பிரதிநிதி ராஜசேகர், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் சுமதி, நிர்வாகிகள் இளங்கோவன், கலைக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் சரவணன் செய்திருந்தார்.
+
Advertisement



