ஈரோடு, ஆக.5: ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 15ம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம், ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். இந்த கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் (1.4.2026 முதல் 31.7.2026 முடிய) குறித்து விவாதித்தல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து அண்ணா கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, சிறு பாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல், ஜல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதால் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
+
Advertisement
