Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குன்னூர் அருகே அழுகிய நிலையில் தொழிலாளி சடலம் மீட்பு

குன்னூர், ஆக.5: நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த ஓட்டுப்பட்டறை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (56). கூலித் தொழிலாளியான இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த இவர், அதன் பிறகு வெளியே வரவில்லை.கடந்த 3 நாட்களாக வீட்டின் கதவு பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், நேற்று குன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு முத்துக்குமார் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆனதால், உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், அவர் அதிக குடிபோதையில் உயிரிழந்தாரா? அல்லது அவரது இறப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பரபரப்பான இந்த உலகில் அனைத்து விஷயங்களையும் உடனே செய்து முடித்து விட வேண்டும் என நினைக்கும் மனிதர்கள் தங்களது சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டே வருகிறார்கள். பொருளாதார சூழ்நிலை காரணமாக இரவு பகல் பாராமல் ஓடி ஓடி உழைக்கின்றனர். அவ்வாறு உழைத்து கோடி கோடியாய் சேர்த்து வைத்த ஜாம்பவான்கள் கூட 100 வயது வரை வாழ்ந்ததில்லை என்பதை பொதுமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.