Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

எழுமாத்தூர் பஸ் ஸ்டாப்பில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

மொடக்குறிச்சி, ஆக.5: மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் பஸ் ஸ்டாப் எதிரே சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எழுமாத்தூரில் அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கும் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக பெற்றோர்கள் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றனர். அதேபோல், எழுமாத்தூர் அரசு கலை கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் எழுமாத்தூர் பஸ் ஸ்டாப்பில் இறங்கி இவ்வழியாகத்தான் நடந்து செல்கின்றனர். அதேபோல் எழுமாத்தூரில் இருந்து ஈரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் இவ்வழியாக தான் சென்று வருகிறது. எனவே, விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எழுமாத்தூர் பஸ் ஸ்டாப்பில் உள்ள குழியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.