கோபி, அக். 2: கோபி அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் சொத்து கேட்டு பெரியம்மாவை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.பங்களாபுதூர் அருகே உள்ள கணக்கம்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் பகவதியண்ணன் மனைவி வசந்தா (60). கூலித்தொழிலாளி. இவருடைய தங்கை மகன் சூர்யா (26), அதே பகுதியில் வசித்து வருகிறார்.வசந்தாவிற்கு சொந்தமான வீட்டை தனது பெயருக்கு மாற்றித்தருமாறு கடந்த சில நாட்களாக சூர்யா தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் வசந்தாவிடம் தகராறு செய்த சூர்யா, அவரை சரமாரியாக தாக்கியதில் வசந்தாவின் பல் உடைந்தது. அருகில் இருந்தவர்கள் வசந்தாவை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
+
Advertisement


