Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

எண்டோஸ்கோப்பிக் முறையில் 60 வயது புற்றுநோயாளிக்கு நவீன அறுவை சிகிச்சை: ரேலா மருத்துவமனை சாதனை

தாம்பரம்: குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மெடிக்கல் சென்டரில், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 60 வயதான பெண் நோயாளிக்கு மேம்பட்ட எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அறுவை சிகிச்சை குழுவிற்கு தலைமை வகித்த முதுநிலை புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஜெகதேஷ் சந்திர போஸ் கூறியதாவது: மார்பக புற்றுநோயியலில் இதுவொரு மேம்பட்ட நவீன சிகிச்சை உத்தியாகும். இந்த செயல்முறைக்கு உகந்தவராக கருதப்படுவதற்கு முன்பு முழுமையான மதிப்பாய்விற்கு இந்நோயாளி உட்படுத்தப்பட்டார். கை கவட்டைப் பகுதியில் ஒரு சிறிய கீறலை செய்து அதன் ஊடாக எண்டோஸ்கோபிக் முறையில் முழுமையாக புற்றுக்கட்டியையும் மற்றும் பாதிக்கப்பட்ட நிணநீர் முடிச்சுகளையும் நாங்கள் அகற்றினோம்.

இந்த அணுகுமுறையானது விரைவான மீட்சிக்கு வழிவகுத்ததோடு, மார்பகத்தின் மீது அறுவை சிகிச்சையின் காரணமாக எந்த தழும்புகளையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறுவை சிகிச்சைக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கி விரைவாக இயல்பு நிலைக்கு இந்நோயாளி திரும்பியதால் சிகிச்சைக்கு அடுத்த நாளன்றே மருத்துவமனையிலிருந்து அவரது வீட்டிற்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது சிகிச்சைக்குப் பிந்தைய பரிசோதனைகளை இப்பெண் தவறாமல் செய்து வருகிறார் மற்றும் நலமுடன் இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரேலா மருத்துவமனையின் தலைமை செயலாக்க அதிகாரி இளங்குமரன் கலியமூர்த்தி கூறுகையில், ‘‘இந்தியாவில் மார்பக புற்றுநோய், குறிப்பாக இளவயது பெண்கள் மத்தியில், அதிகளவில் கண்டறியப்படுவது உயர்ந்து வரும் நிலையில் புற்றுநோயியல் சார்ந்த பாதுகாப்பு மற்றும் மார்பகத்தின் அழகியல் அம்சத்தை தக்கவைப்பது ஆகிய இரண்டையும் உறுதி செய்கிற நவீன சிகிச்சைகளின் அவசியம் முன்பை விட இப்போது மிக அதிகமாக இருக்கிறது. எண்டோஸ்கோபிக் முறையில் மார்பக பாதுகாப்பு அறுவை சிகிச்சை என்பது மார்பக புற்றுநோயியல் பிரிவில் ஒரு வரவேற்பு தக்க அணுகுமுறையாக அறியப்படுகிறது.

பாதுகாப்பை உறுதி செய்யும் அதே நேரத்தில் மார்பகத்தின் அழகியல் அம்சத்தையும் தக்கவைக்க முடியும் என்பதே இதன் தனிச்சிறப்பாகும். வழக்கமாக செய்யப்படும் திறந்தநிலை மார்பக அறுவை சிகிச்சையோடு ஒப்பிடுகையில் குறைவான ஊடுருவலுள்ள இந்த அறுவை சிகிச்சை வழிமுறையானது தழும்புகள் ஏற்படுவதை குறைக்கிறது, அழகியல் சார்ந்த சிகிச்சை விளைவுகளை மேம்படுத்துகிறது. ரோபோடிக், லேப்ராஸ்கோபிக் மற்றும் குறைவான ஊடுருவலுள்ள புற்றுநோய் அறுவை சிகிச்சைகளில் சிறப்பு நிபுணத்துவத்துடன் புற்றுநோயியலுக்கான சிகிச்சையில் முன்னணி மையமாக ரேலா மருத்துவமனை புகழ் பெற்றிருக்கிறது. அதிக திறன்மிக்க மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் மிக நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இம்மருத்துவமனை, புற்றுநோய்களுக்கு முழுமையான, மிக நவீன சிகிச்சை சேவைகளை வழங்குவதிலும் மற்றும் அறுவை சிகிச்சையில் புத்தாக்க உத்திகளை பயன்படுத்துவதிலும் தன்னை தீவிரமாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது,’’ என்றார்.