போளூர், மார்ச் 5: போளூர் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இதர சாலையான நவாப்பாளையம் முதல் அய்யப்ப நகர் சாலையில் மழைநீர் வடிக்கால்வாய் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிக்கு இடையூறாக உள்ள கெங்கவரம் கிராமத்தில் நீண்டகாலமாக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி உத்தரவின்படி கோட்டப்பொறியாளர் ஞானவேல் வழிகாட்டுதலின்படி இந்த சாலையில் ஆக்கிரமித்து உள்ள இடங்களை போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன. போளூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் திருநாவுக்கரசு இதனை ஆய்வு செய்தார். உடன் உதவி பொறியாளர்கள் வெங்கடேசன், வேதவள்ளி, சாலை பணியாளர்கள் உடன் இருந்தனர்.
+
Advertisement


