Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஒட்டன்சத்திரம் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ அர.சக்கரபாணி

ஒட்டன்சத்திரம், ஜூன் 9: ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 7வது முறையாக திமுக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளரான, முன்னாள் அமைச்சர் அர.சக்கரபாணி எம்எல்ஏவாக வெற்றி ெபற்றுள்ளார். இதையடுத்து அவர் வடகாடுமலை கிராமத்திற்குட்பட்ட கோமாளிபட்டி, சிறுவாட்டுக்காடு மாட்டுப்பட்டிகாடு, புலிக்குத்திகாடு, நெல்லுக்குழி பள்ளம், பால்கடை, பாண்டியன்பாறை, கும்ளா மரத்துப்பட்டி, மாஞ்சோலை, மேட்டுப்பட்டி, வண்டிபாதை, வடகாடு உள்ளிட்ட மலைகிராம பகுதிகளில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பாலு, துணைச் செயலாளர் சிவகுமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி, துணைத்தலைவர் பிரபாவதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வடகாடு ஊராட்சியில் வாக்காளர்களுக்கு அர.சக்கரபாணி எம்எல்ஏ நன்றி தெரிவித்தார்.