Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இளைஞர் மீது தாக்குதல்

வடமதுரை, ஜன.30: வடமதுரை அடுத்த செங்குறிச்சி கிராமம் ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்(45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி குடும்பத்தினருக்கும் இடையே நடைபாதையை பயன்படுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 21ம் தேதி வெள்ளைச்சாமி தனது குடும்பத்துடன் சேர்ந்து, வேல்முருகனின் மகன் சக்திவேல்(20) என்பவரிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளைச்சாமி மற்றும் உறவினர்களான பார்வதி, பாப்பாத்தி, சடையன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.