Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பட்டிவீரன்பட்டி அருகே டூவீலர்கள் மோதலில் ஆடு வியாபாரி பலி

பட்டிவீரன்பட்டி, ஜன. 28: பட்டிவீரன்பட்டியில் உள்ள காந்திபுரத்தைச் சேர்ந்தவர் ராமு(65). இவர் ஆடுகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் ஆடுகளை வாங்குவதற்காக நேற்று பட்டிவீரன்பட்டியில் இருந்து திண்டுக்கல் - வத்தலக்குண்டு தேசிய நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிர்திசையில் வத்தலக்குண்டு அருகேயுள்ள விருவீட்டைச் சேர்ந்த கோட்டைச்சாமி(24) என்பவர் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

இவர்கள் இருவரின் டூவீலர்களும் எதிர்பாரதவிதமாக மோதிக்கொண்டது. இந்த விபத்தில் ராமு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த கோட்டைச்சாமியை அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.