Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பழநியில் சட்ட கல்லூரி அமைக்க கோரிக்கை

பழநி, ஜூலை 16:பழநி நகரம் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வட்டமாகவிளங்குகிறது. தமிழகத்தில் கல்வியாளர்கள் நிரம்பிய பகுதியாகவும் பழநி விளங்குகிறது. பழநியில் ஒரு சட்ட கல்லூரி துவக்கினால் இந்நகரை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் சட்ட கல்வி பெறுவது எளிதாக இருக்கும். எனவே, பழநியின் தொன்மையை கருத்தில் கொண்டு தமிழக அரசு பழநியில் ஒரு சட்ட கல்லூரி அமைக்க பரிசீலனை செய்ய வேண்டுமென ஆயக்குடி இலவச பயிற்சி மையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.