Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நத்தம் அருகே டூவீலர் மீது கார் மோதி தொழிலாளி படுகாயம்

நத்தம், பிப். 16: நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (45). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது டூவீலரில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். நத்தம் அருகே குட்டூர் பிரிவு பகுதியில் சென்ற போது சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த ஆதினமிலகி (48) என்பவர் ஓட்டி வந்த கார் இவரது டூவீலரின் பின்னால் மோதியது.

இதில் டூவீலரிலிருந்து தூக்கி வீசப்பட்டு செல்வம் படுகாயமடைந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.