ஒட்டன்சத்திரம், நவ. 15: ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த உதயபிரபாகர், கேதையுறும்பை சேர்ந்த எஸ்தர் சார்லஸ், மதுபால முரளி, கள்ளிமந்தையத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், ராமசாமி உள்ளிட்ட வியாபாரிகள் உணவுப்பொருட்களில் கலப்படம் செய்து விற்பனை செய்துள்ளனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் ராமசாமி உள்ளிட்ட அலுவலர்கள் மூலம் வழக்கு பதியப்பட்டது. ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்குகளில் வியாபாரிகள் 5 பேருக்கும் தலா ரூ.20,000 என ரூ.1 லட்சம் அபராதமும், நீதிமன்றம் கலையும் வரை தண்டனையும் வழங்கப்பட்டது.
