திண்டுக்கல், நவ. 13: திண்டுக்கல்லில் கட்லா, ரோகு, மிர்கால் மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தயாராக உள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அணைப்பட்டி மற்றும் பாலாறு பொருந்தலாறு அரசு மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணைகளில் இந்திய பெருங்கெண்டை மீன் இனங்களான கட்லா, ரோகு மற்றும் மிர்கால் இன மீன் குஞ்சுகள் சுமார் 16 லட்சம் வளர்த்தெடுக்கப்பட்டு விற்பனை செய்ய தயார் நிலையில் உள்ளது.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் வளர்ப்பு செய்து வரும் நீர்த்தேக்கம் மற்றும் குளங்களின் குத்தகைதாரர்கள், மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மீன்வள விவசாயிகள் மற்றும் தனியார் மீன் பண்ணை மீன்வள விவசாயிகள் தங்களது மீன் பண்ணைகளுக்கு தேவையான இந்திய பெருங்கெண்டை மீன்களை தேவைக்கேற்ப அரசு நிர்ணயித்த குறைந்த விலையில் மீன் விரலிகள் கொள்முதல் செய்து பயனடையலாம்.
மேலும், தகவலுக்கு அணைப்பட்டி மீன்வள சார் ஆய்வாளர் பாப்பத்தியை கைபேசி 63748 26415 என்ற எண்ணிலும், பழநி மீன்வள ஆய்வாளர் சாந்தியை கைபேசி 75982 36815 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
