பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிப்பு: பழநி நகராட்சி எச்சரிக்கை
பழநி, நவ. 12: பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படுமென பழநி நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பழநி நகரில் திருமண மண்டபங்கள், லாட்ஜ்கள், சத்திரங்கள், ஹோட்டல்கள் அதிகளவில் உள்ளன. இவற்றில் இருந்து தினமும் ஏராளமான குப்பைகள் சாலைகளில் கொட்டப்படுகின்றன. இதனால் நகர் முழுவதும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.
Advertisement
இதற்கு பதிலாக அதனை சேமித்து நகராட்சி வாகனங்கள் வரும் போது ஒப்படைக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி அறிவிப்பை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள், மேஜை விரிப்புகளை பயன்படுத்த கூடாது என நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement