Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

நத்தம், ஜூன் 11: நத்தம் அருகே செந்துறை- திருநூத்துபட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி மனைவி லெட்சுமி (61). இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். வேலை முடித்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கபட்டு அதில் இருந்த மூன்றரை பவுன் நகை, ரொக்கம் ரூ.42 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து லெட்சுமி நத்தம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.