கோபால்பட்டி, மே 6: நத்தம் பகுதியை சேர்ந்தவர் அஜித் (26). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் மகாலெட்சுமி (19). கல்லூரி மாணவி. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. மேலும் மகாலட்சுமிக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சாணார்பட்டி அருகேயுள்ள கணவாய் கருப்பு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் இருவரும் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அங்கு அவர்களிடம் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மணமகன் அஜித்தின் பெற்றோர் சம்மதம் தெரிவித்ததால் மகாலட்சுமி, அஜித்தையும் மணமகன் வீட்டாருடன் அனுப்பி வைத்தனர்.



