பழநி நவ. 5: பழநி நகராட்சி சண்முகபுரம் பள்ளியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி நேனோ ரபேலா மாநில அளவிலான கலைத்திருவிழாவின் ஓவியப் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அதேபோல், 6-ம் வகுப்பு மாணவன் ஸ்ரீபரத் 1330 திருக்குறள்களையும் ஒப்புவித்து சாதனை படைத்தார்.
மாநில அளவில் வென்ற பள்ளி மாணவர்களை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) சண்முகநாதன், வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயராணி, பழனிராசு மற்றும் தலைமை ஆசிரியை சண்முகப்பிரியா ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.


