திண்டுக்கல், நவ. 5: திண்டுக்கல் மாவட்ட வனக்கோட்டம் சிறுமலை வனச்சரகத்தின் சார்பில், சிறுமலை பிரிவு வனத்துறை சோதனைச் சாவடி அருகே சுற்றுச்சூழல் நட்பு அங்காடி (ECO shop) நேற்று திறக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் நாக சதீஷ்கிடிஜாலா, சிறுமலை பழங்குடியின சங்கத் தலைவர் லட்சுமணன் சூழல் நட்பு அங்காடியை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கினர்.
இங்கு மாவட்ட மலைப்பகுதிகளில் விளையும் மிளகு, காபி, தேயிலை, யூகலிப்டஸ் தைலம், தேன், வாழைப்பழம், பலாப்பழம் உள்ளிட்ட மலை விளைப்பொருட்கள் அனைத்தும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுபோல சுற்றுச்சூழல் பூங்காவிலும் சூழல் நட்பு அங்காடி செயல்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சிகளை சிறுமலை வனச்சரகர் சுரேஷ் செய்திருந்தார்.


