Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திண்டுக்கல் அருகே கார் மோதி 2 வாலிபர்கள் பலி

திண்டுக்கல், நவ.4: திண்டுக்கல் அருகே, கார் மோதி வடமாநில வாலிபர்கள் 2 பேர் பரிதாபமாக பலியாயினர். திண்டுக்கல் அருகே, வத்தலக்குண்டு-பழநி பைபாஸ் சாலை, கொட்டபட்டி அருகே, கடந்த 2 தினங்களுக்கு முன்னர் மதுரையிலிருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே நடந்து சென்ற வடமாநில வாலிபர்கள் 2 பேர் மீது கார் மோதியது. இதில், பலத்தகாயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார், இரண்டு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில்,பலியானவர்கள் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த அஸ்காது பிகாரா (25), மனோஜ் பிகிரி (24) என்பதும், இருவரும் கொட்டப்பட்டியில் உள்ள தனியார் மரக்கடையில் கடந்த சில மாதமாக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.