Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கார் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் பலி

ஒட்டன்சத்திரம், மே 4: ஒட்டன்சத்திரம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். ஆந்திர மாநிலம், சித்தூர், குருபள்ளி மண்டல் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் புறப்பட்டனர். காரை டிரைவர் ஹேமச்சந்திரன் (22) ஓட்டி வந்துள்ளார்.

இவர்கள் வந்த கார் நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் திண்டுக்கல் - பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் சத்திரப்பட்டி அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் கோவிந்தராஜ் என்பவரது மனைவி மஞ்சுளா (38), அண்ணாத்துரை என்பவரது 7 மாத பெண் குழந்தை அனிய ஸ்ரீ ஆகியோர் காரின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த பாஸ்கரன் (23), முருகன் என்பவரது மனைவி வனிதா (40) ஆகியோர் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் கார் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை, மூன்றாக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு ெசய்த விசாரித்து வருகின்றனர்.