Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிலக்கோட்டை கந்தப்பக்கோட்டையில் இடியும் நிலையில் குடிநீர் தொட்டி: அகற்ற கோரிக்கை

நிலக்கோட்டை, மார்ச் 4: நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குல்லலக்குண்டு ஊராட்சிக்குட்பட்டது கந்தப்பக்கோட்டை கிராமம். இங்கு சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி உள்ளது. இதன்மூலம்தான் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த குடிநீர் தொட்டி மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.

குறிப்பாக தூண்களின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் குடிநீர் தொட்டி எப்போது வேண்டுமானாலும் விழும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பழைய குடிநீர் தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய குடிநீர் ெதாட்டி கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.