Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

திண்டுக்கல், கன்னிவாடியில் சட்ட விரோதமாக மது விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது

திண்டுக்கல், மே 20: திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி சங்கர் மேற்பார்வையில், தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன், எஸ்ஐக்கள் கிருஷ்ணகுமார், மோகனப்பிரியா தலைமையிலான போலீசார் சிறுமலை புதூர், வக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த சிறுமலை புதூரை சேர்ந்த பிரான்சிஸ் (73), பழைய வக்கம்பட்டியை சேர்ந்த மோட்சராஜ் மனைவி அந்தோணியம்மாள் (67) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

*கன்னிவாடி போலீசாருக்கு தெத்துப்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ சிராஜுதீன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்த போது தெத்துப்பட்டியை சேர்ந்த மாயக்காள் (70) என்பவர் மதுபானம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.