Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பழநியில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு

பழநி, நவ. 22: பழநியில் ரயில்வே போலீஸ் சார்பில் ரயில் நிலைய வளாகத்திற்கு வந்து செல்லும் ஆட்டோ டிரைவர்கள், குதிரை வண்டி ஓட்டுபவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் பொது இடங்களில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசிற்கு தகவல் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் தனியாக சுற்றி திரிந்தால் 1098 என்ற எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை கடைபிடித்து பயணிகளை தங்களது வாகனங்களில் அழைத்துசெல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இதில் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் குதிரை வண்டி ஓட்டுபவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.