Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நிலக்கோட்டை எம்எல்ஏ அலுவலகம் முற்றுகை

நிலக்கோட்டை, ஜூலை 31: வத்தலக்குண்டு அருகே குரும்பபட்டி, உச்சபட்டி, விராலிபட்டி, கன்னாபட்டி, சாமியாமூப்பனூர், மீனாங்கன்னிபட்டி உள்ளிட்ட 18 கிராமங்களில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இரண்டு தனியார் கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. மேலும், பாறைகளை வெடி வைத்து உடைத்து கற்களை நிலக்கோட்டை அருகே மல்லணம்பட்டி மற்றும் வாடிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கிரசஷர்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

இந்த குவாரிகளில் 24மணி நேரமும் வெடி வைப்பதால், 18க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை கடுமையாக பாதிக்க்கின்றனர். மேலும் விவசாயமும், நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நீர் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முதல்வர், துறை சார்ந்த அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் உள்ளிட்ட பலருக்கும் பலமுறை புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் கல்குவாரிகளில் உள்ளே சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கல்குவாரிகள் தொடர்பான புகாரை கண்டுகொள்ளாத தமிழக அரசைக் கண்டித்து நிலக்கோட்டை எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த எம்எல்ஏ அய்யனார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கனிம வளத்துறை அமைச்சர் மற்றும் முதல்வரிடம் உரிய முறையில் கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.