Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அய்யம்பாளையத்தில் 488 மதுபாட்டில்கள் பறிமுதல்

பட்டிவீரன்பட்டி, ஜூன் 30: பட்டிவீரன்பட்டி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 488 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மதுவிலக்கு எஸ்பி வினோதினி உத்தரவின் பேரில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மாயராஜலட்சுமி, எஸ்ஐ ஆரோக்கிய ரோஜர் மில்டன் மற்றும் போலீசார் பட்டிவீரன்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அய்யம்பாளையத்தில் டாஸ்மாக் கடை அருகே ஒருவர் மது பாட்டில்களை பதுக்கி சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அய்யம்பாளையத்தை சேர்ந்த முத்துராஜ் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முத்துராஜை கைது செய்து, அவரிடமிருந்த 488 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.