Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி விண்ணப்பங்கள் பெற கால நீட்டிப்பு

திண்டுக்கல், ஜூலை 29: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆணையின்படி, திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2026-2027 ஆம் ஆண்டுமுழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 31.07.2026 விண்ணப்பம் பெறப்பட உள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.07.2026 மாலை 5.00 மணி வரை மட்டும், அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே 03.08.2026 வரை சேர்க்கை மேற்கொள்ளப்படும் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ கூட்டுறவு மேலாண்மை நிலையங்களுக்கு விண்ணப்பித்திருந்தால் அவ்விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

பயிற்சிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100, பயிற்சிக்கான பயிற்சிக் கட்டணம் ரூ.20,750, பயிற்சிகாலம் 2 பருவமுறைளாக ஓராண்டு வழங்கப்படும். புதிய பாடத்திட்டத்தின்படி தமிழில் மட்டுமே நடத்தப்படும். தேர்வுகள் தமிழில் அப்ஜெக்டிவ் டைப் வகையில் நடத்தப்படும். பயிற்சி தொடங்கும் நாள் 03.08.2026. விண்ணப்பம் மற்றும் பயிற்சிக்கட்டணம் ஆகியவை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் தொடர்புக்கு 0451 2420056 எண்ணையும், www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தையும் அணுகலாம் என மண்டல இணைப்பதிவாளர் ஜி.ட்டி  ராகவ் பாலாஜி தெரிவித்துள்ளார்.