நிலக்கோட்டை, ஜூன் 29: செம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூன் 30) நடைபெற இருக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செம்பட்டி, பழைய செம்பட்டி, கோடாங்கிபட்டி, மொண்டம்பட்டி, கமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரபான்பட்டி, சேடப்பட்டி,
ஆத்தூர், சித்தையன்கோட்டை, காமராஜர் நீர்த்தேக்கம், எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல், கசவனம்பட்டி, அஞ்சுகம் காலனி, பாப்பம்பட்டி, சமத்துவபுரம், பச்சமலையான்கோட்டை, நடுப்பட்டி, உத்தையகவுண்டன்பட்டி, அம்பாத்துறை மற்றும் இவற்றின் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. செம்பட்டி துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
