Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகளை எம்எல்ஏ ஆய்வு

ஒட்டன்சத்திரம், ஜூலை 28: ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட கலைஞர் நூற்றாண்டு காய்கறி மார்க்கெட், கிரிவலப்பாதை, அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி, கேதைறும்பு ஊராட்சியில் அமைக்கப்பட்டு வரும் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பகுதிகளை திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நகர செயலாளர் வெள்ளைச்சாமி, நகர்மன்ற தலைவர் திருமலைச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.கே.பாலு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன்,

மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ், அரசு ஒப்பந்ததாரர் வேலுச்சாமி, நகராட்சி பொறியாளர் சுப்ரமணியபிரபு, சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்குமார், நகரஇளைஞரணி அமைப்பாளர் சரவணன், துணை அமைப்பாளர் செல்வக்குமார், ஒன்றியதுணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.