Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கழிவுநீர் வடிகால் கட்ட எதிர்ப்பு

திண்டுக்கல் ஜூலை 28: திண்டுக்கல் அருகே என்.பஞ்சம்பட்டி ஊராட்சி 5வது வார்டு பூண்டி மாதா தெருவில், கழிவுநீர் வடிகால் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் மனு அளித்தனர். கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: பூண்டி மாதா தெருவில், கழிவுநீர் வடிகால் வாய்க்கால் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ம் தேதி மனு கொடுத்தோம். இந்நிலையில் மறுநாளே வடிகால் பணியினை ஆரம்பிக்க எந்திரங்கள் கொண்டு வந்து பணியை துவங்கினர். ஆனால் நாங்கள் அந்த பணியினை தடுத்து நிறுத்தினோம்.

கழிவுநீர் வடிகாலை இணைக்கும் இடத்தில், குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் ஆழ்துளை கிணறு உள்ளது. ஆழ்துளை கிணறுகளில் இருந்து குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றி தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. கழிவுநீர் வடிகால் இணைக்கும் இடத்தில் கழிவு நீர் கலக்க நேரிட்டால் சுகாதார சீர்கேடு ஏற்படும். அரசு அனுமதி கொடுத்த பகுதியில் பணியினை மேற்கொள்ளாமல். எங்களது 5 வது வார்டு பூண்டி மாதா தெரு பகுதியில் இணைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

குழந்தை இயேசு தெருவில் கழிவுநீரை அதன் அருகிலேயே இணைத்தால் கழிவு நீர் எளிதாக வெளியேறும். அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படாது. அதனால் இந்த இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். என்று தெரிவித்தனர். ஆகையால் கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பூண்டி மாதா தெருவில் அமைக்கப்பட உள்ள கழிவுநீர் வடிகால் பணியை நிறுத்த வேண்டும்’’ என்றனர்.