Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உதவித்தொகை வழங்குவதாக கூறி ரூ.90 ஆயிரம் மோசடி

தேவதானப்பட்டி, ஆக.26: தலைமைச்செயலகத்தில் இருந்து கல்வி உதவித்தொகை வழங்க பேசுவதாகக்கூறி ரூ.90 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி ஊராட்சி தர்மலிங்கபுரம் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன்(47). இவரது செல்போனுக்கு கடந்த ஜன.9ம் தேதி தலைமை செயலகத்தில் இருந்து பேசுவதாகவும், உங்கள் மகளுக்கு கல்லூரிக்கான கல்வி உதவித்தொகை வந்துள்ளதாகவும் எனவே, அவரது வங்கிக்கணக்கை கூறும்படியும் கேட்டுள்ளார். அதற்கு பாலமுருகன் தரமறுத்ததால் எதிர்முனையில் பேசிய பெண் உடனடியாக இணைப்பை துண்டித்துள்ளார்.

பின்னர் சற்று நேரத்தில் அதே நம்பரில் இருந்து ஒரு ஆண் பேசியுள்ளார். நீங்கள் வங்கி கணக்கை தரவேண்டாம், உங்களது போனில் ஜிபேவை ஓபன் செய்து அதில் ஸ்கேன் கேமராவை ஆன் செய்து சொல்லும் நம்பரை டைப் செய்தால் உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய பாலமுருகன் அவர் கூறியதுபோல் செய்துள்ளார். உடனடியாக அவர் கணக்கில் இருந்த ரூ.89, 999 ரூபாய் மாயமானது. இது குறித்து பாலமுருகன் அளித்த புகாரின் அடிப்படையில், தேவதானப்பட்டி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.