Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கஞ்சாவுடன் 2 பேர் கைது

ஆண்டிபட்டி, ஆக. 28: ஆண்டிபட்டி அருகே சட்டவிரோதமாக கஞ்சாவை பயன்படுத்துவதற்காக வைத்திருந்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரஞ்சித் தலைமையிலான போலீசார், டி.சுப்புலாபுரம் வங்கி பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இரு நபர்களைப் பிடித்து விசாரித்தனர். அப்போதுஅவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களிடம் சோதனை நடத்தினர்.

அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா அவர்களிடம் இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் டி.புதூரை சேர்ந்த பாக்கியராஜ் மற்றும் தி.சுப்புலாபுரம் வடக்குதெருவை சேர்ந்த தனபாண்டியன்(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.