நிலக்கோட்டை, ஆக.28: நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி-மதுரை சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில், நேற்று மாலை 3 இளைஞர்கள் ஒரு காரில் வந்து பெட்ரோல் போட கூறியுள்ளனர். அங்கிருந்த ஊழியர், காருக்கு பெட்ரோல் போட்டு விட்டு, பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் தர மறுத்து, காரில் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர்.
இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர், அம்மையநாயக்கனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், பள்ளபட்டியைச் சேர்ந்த மருது (29), பொட்டி செட்டிபட்டியைச் சேர்ந்த கார்த்திக் (26), அரவிந்த்(26) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அரவிந்தை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.



