ஒட்டன்சத்திரம், ஜூலை 26: ஒட்டன்சத்திரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை டி.எஸ்.பி. கார்த்திகேயன் துவக்கி வைத்தார். ஆய்வாளர் லிங்கபாண்டியன் முன்னிலை வகித்தார். பேரணி காவல் நிலையம், பேருந்து நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் சென்றடைந்தது. கல்லூரி மாணவிகள் போதை பொருள் ஒழிப்பதின் அவசியம் குறித்து பதாகைகள் ஏந்தி உறுதிமொழி எடுத்தனர்.
பேரணியில் சக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தேன்மொழி உள்ளிட்ட கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.


