Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பழநி கடைகளில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு; 2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

பழநி, ஜூலை 24: குட்கா விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் பழநி நகரில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்தனர். பழநி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி உத்தரவின்பேரில், சுகாதார அலுவலர் செந்தில்ராம்குமார் அறிவுறுத்தலின்படி நேற்று சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.ராஜாஜி சாலை, தேரடி மற்றும் கடைவீதி சாலைகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.