Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாணார்பட்டி வட்டாரத்தில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு மானியம்: விவசாயிகளுக்கு அழைப்பு

கோபால்பட்டி, மே 23: சாணார்பட்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சாணார்பட்டி வட்டாரத்தில் 2026- 2027ம் ஆண்டு நிதியாண்டிற்கான பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்திட 140 ஹெக்டேர் பரப்பில் ரூ.90 லட்சம் நிதி மானியமாக பெறப்பட்டுள்ளது இத்திட்டத்தின் நோக்கம் ஆனது ஒரு துளி நீரில் அதிக பயிர் என்பதாகும். இத்திட்டமானது மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் நீர் வளத்தை பாதுகாத்து விளைச்சலை அதிகப்படுத்துவதாகும். இதன் கீழ் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மலைத்துவான் ஆகியவற்றுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரையில் 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 12.5 ஏக்கர் வரையில் 75 சதவீத மானியத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.