Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழநி ரேசன் கடையில் அரிசி விநியோகத்தில் முறைகேடு செய்த ஊழியர் சஸ்பெண்ட்: உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

பழநி, மே 23: பழநியில் அரிசி விநியோகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி ரேசன் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்களை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களாக கணக்கிட்டு, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 1000க்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்ட கலெக்டரிடம் தங்களது ரேஷன் அட்டைகளை ஏஏஒய் அட்டைகளாக மாற்றி தர வலியுறுத்தி மனு அளித்திருந்தனர். இந்த மனுக்களின் அடிப்படையில் படிப்படியாக ரேஷன் அட்டைகள் ஏஏஒய் அட்டைகளாக மாற்றப்பட்டு வருகிறது.