Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

உணவு விடுதியில் ஹெல்மெட் திருடிய இளைஞர்கள்

கொடைக்கானல், ஜூன் 22: கொடைக்கானல் பூம்பாறை மலைக்கிராமத்தில் உள்ள உணவு விடுதியில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டை திருடி செல்லும் இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வைரல், ஹெல்மெட்டை கூட விட்டுவைக்க மாட்டார்களா என பொதுமக்கள் கவலை.

கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை செல்லும் வழியில், பூம்பாறை பிரிவு சாலை அமைந்துள்ளது. இதனருகே சாலையோர உணவு விடுதிக்கு, நேற்று இளைஞர்கள் இருவர் சாப்பிடுவதற்காக வந்தனர். பின்னர் உணவருந்திய அவர்கள், அதற்கான தொகையை செலுத்த கேஷ் கவுன்டர் அருகே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மற்றொரு நபர், தனது ஹெல்மெட்டை கேஷ் கவுன்டர் அருகே வைத்துவிட்டு, உணவு விடுதிக்குள் சென்றுள்ளார். இதனை பார்த்த இளைஞர்களில் ஒருவர், தாங்கள் சாப்பிட்ட உணவுக்கான பணத்தை செலுத்தியபின். அந்த நபர் வைத்துச்சென்ற ஹெல்மெட்டை திருடிக்கொண்டு, தங்கள் டூவீலரில் புறப்பட்டுச்சென்றார். இந்த காட்சிகள் அருகில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவானது. இவைசமூகவலைளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.