Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குஜிலியம்பாறை அருகே டிபார்ட்மெண்ட் ஸ்டோர் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு மர்மநபர்களுக்கு வலை

குஜிலியம்பாறை, ஜூலை 21: குஜிலிம்பாறை அருகே டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் பூட்டை உடைத்து ரூ.1.06 லட்சம் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை ேபாலீசார் தேடி வருகின்றனர.

குஜிலியம்பாறை அருகே ஆர்.வெள்ளோட்டில், திருப்பூரை சேர்ந்த திருமூர்த்தி என்பவருக்கு சொந்தமாக டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளது. இதில் ஆர்.வெள்ளோட்டை சேர்ந்த தமிழரசி (46) என்பவர் வேலை பார்த்து வருகிறார். தமிழரசி தினமும் காலை 7 மணிக்கு கடையை திறந்து இரவு 8.30 மணிக்கு கடையை அடைப்பது வழக்கம்.

அதேபோல் கடந்த ஜூலை 18ம் தேதி இரவு 8.30 மணிக்கு கடையை அடைத்து சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை கடையை திறக்க சென்ற போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடை உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த ரூ.1,06,348 பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து தமிழரசி அளித்த புகாரின் பேரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.