Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறு தானியங்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்

பழநி, ஜன.21: பழநி மற்றும் தொப்பம்பட்டி பகுதிகளில் நெல், கரும்பு, சிறு தானியங்கள், பருத்திப்பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பயிர்களில் தற்போது மாவுப்பூச்சிகள் தென்படுவதாக கூறப்படுகிறது. இப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்-துவதற்கு வயலைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கிரிப்டோளமஸ் பொறி வண்டுகளை ஏக்கருக்கு 600 எண்கள் வீதம் பயன்படுத்துதல், 5% வேப்பங்கொட்டை கரைசலை ஒட்டும் திரவத்துடன் கலந்து பயன்படுத்த வேண்டும்.

மேலும், ரசாயன மருந்துகளாக புரபனோபஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி, இமிடா குளேபிரிட் 0.5 மில்லி, தயோ மீத்தாக்சான் ஒரு கிராம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.மருந்து தெளிக்கும் போது ஒட்டும் திரவத்தை பயன்டுத்த வேண்டும். மருந்தை சுழற்சி முறையில் பயன்டுத்துவதே சிறந்தது. இம்முறையை விவசாயிகள் கடைபிடிக்கும்போது பயிர்களில் மாவுப்பூச்சிகளின் தாக்குதல் குறையுமென வேளாண்துறை அலுவலர்கள் கூறி உள்ளனர்.