Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நத்தம் அருகே நோய் பாதிப்பால் மூதாட்டி தற்கொலை

நத்தம், டிச. 20: நத்தம் அருகே சீரங்கம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி வெள்ளையம்மாள் (65). இவர் கடந்த சில மாதங்களாக சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு அவதிபட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்புற்று காணப்பட்ட வெள்ளையம்மாள் சம்பவத்தன்று அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி விட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளையம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.