Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெண்ணிற்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 10 ஆண்டு சிறை திண்டுக்கல் மகளிர் கோர்ட் தீர்ப்பு

திண்டுக்கல், டிச. 19: ஆத்தூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ராமையா (50). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2016ல் மனநலம் பாதித்த 27 வயது பெண்ணிற்கு பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் உறவினர்கள் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ராமையாவை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி ஆஜரானார். விசாரணை முடிவடைந்த நிலையில் இவ்வழக்கில் நீதிபதி சரண் தீர்ப்பு வழங்கினார். இதில் ராமையாவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.