திண்டுக்கல், ஆக. 19: திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டி பகுதியில் புறநகர் டிஎஸ்பி சங்கர் மேற்பார்வையில், தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில், எஸ்ஐ மோகனப்பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நல்லாம்பட்டி சாலையில் உள்ள நாகம்மாள் கோயில் அருகே சென்ற போது, அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓடியது. உடனே போலீசார் விரட்டி சென்று அவர்களில் 3 பேரை மடக்கி பிடித்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் பாடியூர் வடக்கு தெருவை சேர்ந்த மாணிக்கவாசகம் (27), யாகப்பன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ஹரிஸ் ஆனந்த் (25), பெரியகோட்டையை சேர்ந்த அர்ஜூனன் (24) என்பதும், விற்பனை செய்வதற்கு கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்த 1 கிலோ உலர் கஞ்சா மற்றும் 4 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.



