Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குஜிலியம்பாறை அருகே சாலை ஓரத்தில் இறந்து கிடந்த மயில்

குஜிலியம்பாறை, ஆக. 19: குஜிலியம்பாறை அருகே வெள்ளப்பாறை- பாளையம் வழித்தடத்தில் சாலையோரம் மயில் ஒன்று இறந்து கிடப்பதாக அய்யலூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அய்யலூர் வனச்சரக அலுவலர் கணேஷ் பாண்டியன் உத்தரவின்பேரில், வனசரக பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது பெண் மயில் இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் இறந்த மயிலை மீட்டு உடற்கூராய்வுக்காக கொண்டு சென்றனர்.