Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க அரசிற்கு கோரிக்கை

பழநி, ஜூன் 19: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஓய்வு பெற்ற பணியாளர் நலச்சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,

திருக்கோயில்களில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அந்தந்த கோயில்கள் மூலமாகவும், நிதி இல்லாத கோயில் பணியாளர்களுக்கு அறநிலையத் துறை மூலம் ரூபாய் 100 கோடி வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டு, அதில் கிடைக்கும் வட்டித்தொகையின் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, அரசிற்கு இதனால் எந்தவித பொருட் சுமையும் இல்லை. கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் பெரும்பாலானவர்கள் 65 வயதைக் கடந்த முதியவர்கள் ஆவர். அவர்களுக்கு மருத்துவச் செலவு, உணவுத் தேவைகள் போன்றவற்றிற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் போதியதாக இல்லை.

இன்றை விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு திருக்கோயில்களில் ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.5 ஆயிரம் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.