Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தைகளை மின் சாதனங்களுடன் விளையாட அனுமதிக்காதீர்: தீயணைப்பு துறையினர் அட்வைஸ்

திண்டுக்கல், மே 19: குழந்தைகளை மின்னோட்டமுள்ள மின்சாதனங்களுடன் விளையாட அனுமதிக்க கூடாது என தீயணைப்பு துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: வீட்டில் உள்ள பொருட்களை அந்தந்த இடங்களில் வைக்க வேண்டும். தேவையற்ற பொருட்கள் மற்றும் காகிதங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி விட வேண்டும். முற்றிலும் அணையாத தீக்குச்சிகளை குப்பை கூடையில் போட கூடாது.

ஜன்னல் மற்றும் மாடியில் இருந்தும் வீசக்கூடாது. படுக்கையில் இருந்து கொண்டே புகை பிடிக்க கூடாது. மின்சாரம் இல்லாத போது பயன்படுத்தப்படும் சிம்னி விளக்கு, மெழுகுவர்த்தி போன்றவற்றை மின்சாரம் வந்தவுடன் உடனடியாக அணைத்து விட வேண்டும். குழந்தைகளை மின்னோட்டமுள்ள மின்சாதனங்களுடன் விளையாட அனுமதிக்க கூடாது.