Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சாலையோர கடைகளில் சுகாதாரமின்றி உணவு விற்பனை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நிலக்கோட்டை, ஆக.18: நிலக்கோட்டையில் முக்கியமான ரோடுகளில் உள்ள கடைகளில் ‘ஈ’ தொல்லை அதிகம் உள்ளது. பழக்கடைகள், குளிர்பானக்கடைகள், இனிப்பகங்கள், ஓட்டல்கள் என அனைத்து இடங்களிலும் ஈ ஆதிக்கம் நிறைந்திருக்கிறது.ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளில், ‘ஈ’ மொய்க்கும், தூசி கலந்த உணவுபொருட்கள் விற்பனை நடக்கின்றன. அதை உண்போருக்கு உடல்நலக்குறைபாடு ஏற்படுகிறது. உணவுப்பொருட்களை ‘ஈ’ மொய்க்காதவாறு சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய அனைத்துப்பகுதிகளிலும் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்புதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.